தேங்காய்-பொட்டுக்கடலை பர்பி

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • பொட்டுக்கடலை
  • சர்க்கரை
  • எண்ணெய்

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில், ஒரு கிலோ சர்க்கரை, 200 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இது பாதி அளவாக ஆனவுடன், இரண்டு கப் துருவிய தேங்காய், 200 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து தட்டில் ஊற்றும் பதம் வரும் வரை கலந்து விடவும்.

பின், ஒரு தட்டில் எண்ணெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

Previous Post Next Post