கோதுமை வெங்காய வடை

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம்
  • கோதுமை மாவு
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சோம்பு
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், 1/4 கப் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின், உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post