பச்சை பட்டாணி கிரேவி


தேவையான பொருட்கள் 

  • பச்சை பட்டாணி 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • சோம்பு 
  • சிக்கன் மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மஞ்சள் தூள் 
  • பச்சை மிளகாய் 
  • இஞ்சி-பூண்டு விழுது
  • தேங்காய்
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • கடுகு
  • எண்ணெய் 
  • உப்பு 


செய்முறை 

முதலில், கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். இவை ஆறிய பின் நன்கு அரைத்துக் கொள்ளவும் 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

மேலும், 1/2 கப் பச்சை பட்டாணி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

இதனுடன், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post