கொள்ளு பருப்பு வெங்காய பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • கொள்ளு பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • அவல் 
  • பெரிய வெங்காயம் 
  • கடலைப்பருப்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • சீரகம் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை
  • உப்பு 
  • நல்லெண்ணெய்


செய்முறை 

ஒரு கப் கொள்ளு பருப்பு, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். 

இதனுடன், 1/4 கப் அவல் சேர்த்து அரைக்கவும். 

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு 5 மணி நேரம் வைக்கவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், இதனை தயார் செய்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து மேலும்,  அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். 

பின்னர், பணியாரக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post