தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- கடலை மாவு
- அரிசி மாவு
- வேர்க்கடலை
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் துருவிய பீட்ரூட், 1/2 கப் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு கைப்பிடி வேர்க்கடலை, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவாக பொரித்து எடுக்கவும்.
