தேவையான பொருட்கள்
- ரவை
- கேரட்
- மைதா
- பெரிய வெங்காயம்
- பாசிப்பருப்பு
- பச்சை மிளகாய்
- தயிர்
- எண்ணெய்
- உப்பு
- கடுகு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், 1/2 கப் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 200 கிராம் ரவை, 50 கிராம் மைதா சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விடவும். ஆறிய பின், அதனுடன் 50 மில்லி தயிர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின், பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
