தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி
- மட்டன்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பட்டை
- இலவங்கம்
- ஏலக்காய்
- பிரியாணி இலை
- எலுமிச்சை சாறு
- நெய்
- உப்பு
- எண்ணெய்
- புதினா
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 10 பல் பூண்டு, பொடியாக நறுக்கிய இரண்டு ஸ்பூன் இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், நான்கு காய்ந்த மிளகாய், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஏலக்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மண்பானையில், 50 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, இலவங்கம், பிரியாணி இலை, நான்கு பச்சை மிளகாய், 50 கிராம் சின்ன வெங்காயம் தோல் நீக்கிவிட்டு ஒன்று-இரண்டாக தட்டி சேர்க்கவும் , மேலும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.
பின்னர், ஒரு கப் மட்டன் சேர்த்து வதக்கவும்.
இதனுடன், 1/2 மணி நேரம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, ஐந்து டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
