தேவையான பொருட்கள்
- புதினா
- தேங்காய்
- தக்காளி
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- பூண்டு
- புளி
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், ஆறு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு தக்காளி, நான்கு பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் புதினா, சிறிதளவு புளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
