கத்தரிக்காய்-உருளைக்கிழங்கு வறுவல்


தேவையான பொருட்கள் 

  • கத்தரிக்காய் 
  • உருளைக்கிழங்கு 
  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • சாம்பார் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், நீளமாக நறுக்கிய 300 கிராம் கத்திரிக்காய்-உருளைக்கிழங்கு (இரண்டும் சேர்த்து 300 கிராம்), ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் வதக்கவும். 


பின்னர், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Previous Post Next Post