மதுரை கறி தோசை


தேவையான பொருட்கள் 

  • மட்டன் 
  • தோசை மாவு
  • முட்டை 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • தக்காளி 
  • தனியா தூள்
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள்
  • மிளகுத்தூள் 
  • கறி மசாலா தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின்னர், 300 கிராம் மட்டன் கொத்து கறி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

மேலும், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

தோசை கல்லில், தோசை மாவு, அதன் மேல் ஒரு முட்டை ஊற்றி, தயார் செய்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி தேவையான அளவு வைத்து விரித்து விட்டு, தேவையான அளவு எண்ணெய், கொத்தமல்லி இலை தூவி விட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post