தேவையான பொருட்கள்
- மைதா
- முட்டைக்கோஸ்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் மைதா, 1/2 கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், 1/2 கப் பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், தேவைக்கேற்ப சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
