மட்டன்-முட்டை வறுவல்


தேவையான பொருட்கள் 

  • மட்டன் 
  • முட்டை 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • பச்சை மிளகாய் 
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள் 
  • மட்டன் மசாலா தூள் 
  • மிளகுத்தூள் 
  • சோம்பு 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், நான்கு முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

குக்கரில், 500 கிராம் மட்டன், நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 

பின், வேக வைத்துள்ள மட்டனை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், மட்டன் வேக வைத்த தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

பின்னர், வேக வைத்துள்ள முட்டையை தோலை நீக்கிவிட்டு இரண்டாக வெட்டி சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post