மசாலா பொடி இல்லாத மட்டன் வறுவல்


தேவையான பொருட்கள் 

  • மட்டன்
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • இஞ்சி 
  • பூண்டு 
  • பச்சை மிளகாய் 
  • சோம்பு 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

முதலில், நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, ஐந்து பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன், 300 கிராம் மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின், மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post