தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், நான்கு சப்பாத்தியை பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர், 1/4 கப் அரைத்த தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
இதனுடன், தயார் செய்து வைத்துள்ள சப்பாத்தி, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
