தேவையான பொருட்கள்
- பிரட்
- பால்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
- கருப்பட்டி
- நெய்
செய்முறை
ஐந்து பிரட் துண்டுகளில் நான்கு ஓரத்தையும் நீக்கிவிட்டு பொடித்துக் கொள்ளவும்.
கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், பொடித்து வைத்துள்ள பிரட் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின், பாத்திரத்தில், 500 மில்லி பால், ஒரு டம்ளர் தண்ணீர், 50 கிராம் பொடியாக்கிய கருப்பட்டி சேர்த்து பால் கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் பொங்கி வராமல் கலந்து விடவும்.
பின், நெய்யில் வறுத்து வைத்துள்ள பிரட், பத்து முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
