தேவையான பொருட்கள்
- சிக்கன்
- சீரகம்
- மிளகு
- பெரிய வெங்காயம்
- தனியா தூள்
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- முந்திரி
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், நான்கு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் மிளகு, ஐந்து முந்திரி சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். மேலும் இதனுடன், அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
