மட்டன் ஆம்லெட்

தேவையான பொருட்கள் 

  • மட்டன் 
  • முட்டை 
  • மட்டன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகுத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

குக்கரில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 200 கிராம் எலும்பில்லாத மட்டன், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விடவும்.‌ 

வேக வைத்த மட்டன் ஆறிய பின், மசித்துக் கொள்ளவும். மேலும், இதனுடன் ஐந்து முட்டை உடைத்து ஊற்றி, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.‌ 

பின்னர், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து மேலே, தேவையான அளவு மிளகுத்தூள் தூவி விட்டு வேக வைக்கவும்.
Previous Post Next Post