தேவையான பொருட்கள்
- வரகு அரிசி
- தேங்காய்
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- நெய்
- உப்பு
செய்முறை
200 கிராம் வரகு அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை முழுவதுமாக துணியில் கட்டி வடித்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீர் சேர்த்து உதிரி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், வேக வைத்துள்ள மாவுடன், 1/4 கப் நாட்டுச் சர்க்கரை, 1/4 கப் துருவிய தேங்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
