ஃப்ரைடு வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள் 

  • அரிசி 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • கேரட் 
  • பீன்ஸ் 
  • பச்சை பட்டாணி 
  • பிரியாணி மசாலா தூள் 
  • சிக்கன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • பச்சை மிளகாய் 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • சோம்பு 
  • பிரியாணி இலை 
  • பட்டை 
  • இலவங்கம் 
  • ஏலக்காய் 
  • தயிர் 
  • எலுமிச்சை சாறு 
  • நெய் 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • புதினா 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, இலவங்கம், ஒரு ஏலக்காய், பிரியாணி இலை, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 

பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும். 

கடாயில், நான்கு ஸ்பூன் நெய், நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு கப் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி (மூன்றும் சேர்த்து ஒரு கப்), 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஃப்ரை செய்யவும். பின், சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள பிரியாணியை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, அதனுடன் ஃப்ரை செய்து வைத்துள்ள கேரட்-பீன்ஸ், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post