கம்பு கார கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் 

  • கம்பு மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • பாசிப்பருப்பு 
  • தேங்காய் 
  • பெருங்காயத்தூள்
  • கடுகு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு கப் கம்பு மாவு, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும். 

ஆறிய பின், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். 

பின்னர், கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
Previous Post Next Post