தேவையான பொருட்கள்
- புதினா
- எலுமிச்சை சாறு
- சர்க்கரை
- ஐஸ் கட்டி
செய்முறை
ஒரு கைப்பிடி புதினாவை நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், தேவையான அளவு சர்க்கரை, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக, தேவையான அளவு ஐஸ் கட்டி சேர்த்து கலந்து விடவும்.
