தேவையான பொருட்கள்
- கம்பு மாவு
- தேங்காய்
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- முந்திரி
- நெய்
- உப்பு
செய்முறை
கடாயில், ஒரு கப் கம்பு மாவு சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 கப் துருவிய தேங்காய், 20 கிராம் முந்திரி, 1/4 கப் நாட்டு சர்க்கரை, இரண்டு ஸ்பூன் நெய், 1/4 கப் வெந்நீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர், இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
