தேவையான பொருட்கள்
- முட்டை
- பிரட்
- சீஸ்
- பச்சை மிளகாய்
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா தூள்
- உப்பு
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
நான்கு முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதனுடன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் பொடியாக்கிய பிரட், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து டோஸ்ட் செய்து கொள்ளவும்.
வதங்கிய பின், பிரட்டை பேன் முழுக்க வருமாறு அகலப்படுத்தி விட்டு, கலந்து வைத்துள்ள முட்டையை அதன் மேல் முழுவதுமாக ஊற்றவும்.
அதன் மேல், தேவையான அளவு துருவிய சீஸ், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் எண்ணெய், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்.
வெந்தவுடன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
