தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- தேங்காய்
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- நெய்
- உப்பு
செய்முறை
கடாயில், ஒரு கப் ராகி மாவு சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 கப் வெந்நீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
பின், புட்டு குழாயில் துருவிய தேங்காய், தயார் செய்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக மாறி மாறி நிரப்பவும்.
பின்னர், இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து புட்டு குழாயை அதில் வைத்து வேக வைக்கும்.
வெந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள குழா புட்டை எடுத்து அதன் மேல் தேவையான அளவு நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
