தேவையான பொருட்கள்
- தினை அரிசி
- புளி
- பூண்டு
- வேர்க்கடலை
- காய்ந்த மிளகாய்
- நல்லெண்ணெய்
- வெந்தயம்
- கடலைப்பருப்பு
- புளி சாத பொடி
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி தோல் நீக்கிய வேர்கடலை, 10 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 1/4 கப் புளி கரைசல், இரண்டு ஸ்பூன் புளி சாத பொடி, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து புளி சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த தோல் நீக்கிய இரண்டு டம்ளர் தினை அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
