கம்பு தயிர் சாதம்

தேவையான பொருட்கள் 

  • கம்பு சாதம் 
  • தயிர் 
  • கடலைப்பருப்பு 
  • கடுகு 
  • காய்ந்த மிளகாய் 
  • இஞ்சி
  • மாதுளை 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

ஒரு கப் கம்பு சாதம், 1/2 கப் தயிர், தேவையான அளவு உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர், 1/4 ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளவும். 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக, தேவையான அளவு மாதுளை சேர்க்கவும்.
Previous Post Next Post