தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- கருப்பு உளுந்து
- வெந்தயம்
- ஜவ்வரிசி
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- சீரகம்
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
இரண்டு கப் இட்லி அரிசி, 1/2 கப் கருப்பு உளுந்து (தோல் நீக்காத உளுந்து பருப்பு), இரண்டு ஸ்பூன் வெந்தயம், நான்கு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஆறு மணி நேரம் வைக்கவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய் வதக்கி அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். மேலும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
