ஸ்வீட் கார்ன் சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் 

  • ஸ்வீட் கார்ன் 
  • சப்பாத்தி
  • பட்டர் 
  • மிளகுத்தூள் 
  • தனியா தூள் 
  • மிளகாய் ‌தூள்
  • கறி மசாலா தூள்
  • சில்லி சாஸ் 
  • டொமேட்டோ சாஸ்
  • உப்பு 

செய்முறை 

கடாயில், 20 கிராம் பட்டர், ஒரு கப் ஸ்வீட் கார்ன், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஃப்ரை செய்யவும்.

பின், சப்பாத்தியில், ஒரு ஸ்பூன் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் டொமேட்டோ சாஸ் தடவி அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் வைத்து ரோல் செய்யவும்.
Previous Post Next Post