தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- மட்டன்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- கறி மசாலா தூள்
- மட்டன் மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
பின், 150 கிராம் கொத்து கறி அல்லது பொடியாக நறுக்கிய மட்டன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 1 1/2 டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
மேலும், பொடியாக வெட்டிய இரண்டு சப்பாத்தி, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விட்டு இறக்கவும்.
