சிக்கன் தொக்கு


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • இஞ்சி-பூண்டு விழுது  
  • சோம்பு 
  • கறி மசாலா தூள்
  • மஞ்சள் தூள் 
  • தனியா தூள் 
  • சிக்கன் மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள்
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். 

பின், 500 கிராம் சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post