தேவையான பொருட்கள்
- முட்டை
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- முட்டை மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், நான்கு முட்டையை வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் முட்டை மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள முட்டை, 1/4 கப் அரைத்த தேங்காய், ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
