பூண்டு பொடி தோசை

தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • பூண்டு 
  • காய்ந்த மிளகாய் 
  • இட்லி பொடி
  • பெருங்காயத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், 1/4 கப் பொடியாக நறுக்கிய பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பொரிக்கவும். 

பின், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

இதனுடன், நான்கு ஸ்பூன் இட்லி பொடி, ஒரு சிட்டிகை உப்பு  சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 

பின்னர், தோசை ஊற்றி அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி விட்டு, தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
Previous Post Next Post