தேவையான பொருட்கள்
- அப்பளம்
- கடலை மாவு
- அரிசி மாவு
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- மிளகாய் தூள்
- சோம்பு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், 1/2 கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/2 கப் பொரித்து பொடியாக்கிய அப்பளம், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வேக வைக்கவும்.
