தேவையான பொருட்கள்
- சிக்கன்
- முட்டை
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- பச்சை மிளகாய்
- சிக்கன் மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- மிளகுத்தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், இரண்டு முட்டை, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு ஆம்லெட் ஆக ஊற்றி, சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டியவுடன், தயார் செய்து வைத்துள்ள முட்டை, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
