தேவையான பொருட்கள்
- தேங்காய்
- சாதம்
- காய்ந்த மிளகாய்
- உளுந்து பருப்பு
- கறிவேப்பிலை
- கடுகு
- கடலைப்பருப்பு
- பூண்டு
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு பல் பூண்டு சேர்த்து லேசாக வறுத்து 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், அரைத்து வைத்துள்ள தேங்காயை ஒரு கப் சாதத்துடன் கலந்து கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் சேர்க்கவும்.
