மீந்து போன சாதத்தில் தக்காளி சாதம்


தேவையான பொருட்கள் 

  • மீந்து போன சாதம் 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • கடலைப்பருப்பு 
  • மஞ்சள் தூள்
  • கறி மசாலா தூள்
  • சோம்பு 
  • இஞ்சி 
  • பூண்டு
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி, ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பின், ஒரு கப் மீதமான சாதம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
Previous Post Next Post