தேவையான பொருட்கள்
- சிக்கன்
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- சிக்கன் மசாலா தூள்
- கறி மசாலா தூள்
- மிளகுத்தூள்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- சோம்பு
- கசகசா
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். மேலும், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு, 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், அரைத்து வைத்துள்ள தேங்காய், தேவையான அளவு உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
