தேவையான பொருட்கள்
- கோதுமை ரவை
- தயிர்
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- கடுகு
- இஞ்சி
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- மாதுளை
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், ஒரு கப் கோதுமை ரவை சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த ரவை ஆறிய பின், 1/2 கப் தயிர், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து ரவையை தாளித்துக் கொள்ளவும்.
இறுதியாக, சிறிதளவு மாதுளை தூவி விடவும்.
