தேவையான பொருட்கள்
- சேமியா
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- கடுகு
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் சேமியாவை எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், 1.5 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், வறுத்து வைத்துள்ள சேமியா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
