தேவையான பொருட்கள்
- தக்காளி
- துவரம் பருப்பு
- ரசம் பொடி
- மஞ்சள் தூள்
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், நான்கு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ¼ ஸ்பூன் சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், வேக வைத்துள்ள பருப்பு, தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு தண்ணீர், ஒரு ஸ்பூன் ரசம் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
