தேவையான பொருட்கள்
- அரை கீரை
- பச்சை மிளகாய்
- சின்ன வெங்காயம்
- சீரகம்
- உப்பு
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் இரண்டு கப் கீரை மற்றும் நான்கு பச்சை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
கீரை வெந்தவுடன் சேர்த்துள்ள நீரை வடிகட்டி எடுத்து விடவும். வேக வைத்துள்ள கீரையுடன் பத்து சின்ன வெங்காயம் தட்டி சேர்க்கவும், 1/2 ஸ்பூன் சீரகம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கடைந்து கொள்ளவும்.
இறுதியாக நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
