பூரி கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • கடலை மாவு
  • தக்காளி
  • இஞ்சி
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • கடலைப்பருப்பு
  • கடுகு
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

300 கிராம் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவை வதங்கிய பின் ஒரு சிறிய தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, இரண்டு ஸ்பூன் கடலைமாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும் மற்றும் தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post