தேவையான பொருட்கள்
- இஞ்சி
- கடலைப்பருப்பு
- காய்ந்த மிளகாய்
- கருவேப்பிலை
- நல்லெண்ணெய்
- கொத்தமல்லி இலை
- கடுகு
- உப்பு
செய்முறை
ஒரு கடாயில் 50 கிராம் இஞ்சியை தோல் சீவி நறுக்கி சேர்த்து வதக்கவும்.
பிறகு, இரண்டு காய்ந்த மிளகாய், நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
இறுதியாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை, ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
