கொத்தமல்லி இலை சட்னி

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி இலை
  • உளுந்து பருப்பு
  • பாசிப்பருப்பு
  • புளி
  • தக்காளி
  • பூண்டு
  • நல்லெண்ணெய்
  • தேங்காய்
  • உப்பு
  • காய்ந்த மிளகாய்
  • கருவேப்பிலை

செய்முறை

ஒரு கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த உடன் நான்கு பல் பூண்டு, ஒரு தக்காளி, சிறிதளவு புளி, சிறிதளவு கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு கப் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.

இறுதியாக 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post