தேவையான பொருட்கள்
- ஸ்ட்ராபெரி
- சர்க்கரை
- மைதா
- ரவை
- பால்
- ட்ரை கோக்கனட்
- முந்திரி
செய்முறை
1/2 கப் ஸ்ட்ராபெரி மற்றும் 1/2 கப் பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், அரைத்து வைத்துள்ள ஸ்ட்ராபெரி சேர்த்து சூடானவுடன், 1/4 கப் சர்க்கரை, 1/4 கப் மைதா, இரண்டு ஸ்பூன் ரவை சேர்த்து இறுகும் வரை நன்கு கிளறவும்.
இறுதியாக, நான்கு ஸ்பூன் ட்ரை கோக்கனட், 1/4 கப் உடைத்த முந்திரி சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடித்து அதன் மேலே ட்ரை கோக்கனட் தூவி விடவும்.
