பிரண்டை இட்லி

தேவையான பொருட்கள்

  • பிரண்டை
  • இட்லி மாவு
  • கடலைப்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • சீரகம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

முதலில், 1/2 கப் பிரண்டையை தோலை சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.‌

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பிரண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின், ஒரு கப் இட்லி மாவுடன் வதக்கி வைத்துள்ள பிரண்டை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post