தேவையான பொருட்கள்
- மரவள்ளி கிழங்கு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- கடலை மாவு
- கடலைப்பருப்பு
- கடுகு
- தக்காளி
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், நான்கு பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன், ஒரு கப் மரவள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து சேர்க்கவும். மேலும், இதனுடன் இரண்டு ஸ்பூன் கடலைமாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
