பிரண்டை சில்லி

தேவையான பொருட்கள்

  • பிரண்டை
  • சோள மாவு
  • மைதா
  • கடலை மாவு
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • தனியா தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • சில்லி பொடி
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • தயிர்

செய்முறை

1/4 கப் பிரண்டையை தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதனுடன், இரண்டு ஸ்பூன் சோள மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் கடலை மாவு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் சில்லி பொடி, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவைப்பட்டால் மேலும் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

பின், எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post