தேவையான பொருட்கள்
- பிரண்டை
- சின்ன வெங்காயம்
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- காய்ந்த மிளகாய்
- புளி
- தக்காளி
- தேங்காய்
- உப்பு
- சீரகம்
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 1/4 கப் பிரண்டையை தோலை சீவி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் மற்றும் பிரண்டை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன், 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, சிறிதளவு புளி, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், 1/4 கப் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
ஆறிய பின், இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
