சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்வீட் வடை

தேவையான பொருட்கள்

  • சர்க்கரைவள்ளி கிழங்கு
  • மைதா
  • கேரட்
  • ரவை
  • நாட்டுச் சர்க்கரை
  • ஏலக்காய் பொடி
  • எண்ணெய்

செய்முறை

300 கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன், 1/4 கப் துருவிய கேரட், 1/4 கப் மைதா, நான்கு ஸ்பூன் ரவை, 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 1/2 ஸ்பூன்‌ ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post